-9%

Sacred Gomathi Chakras Set of Eleven – S316567


550.00 605.00

Zip Code
GO

Gomathi Chakras Set of Eleven

(Gomathi Chakra Shells)

Rs. 550/-
(கோமதி சக்கரம், గోమతి చక్రం)

தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்

ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக கோமதி சக்கரம்இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும்.

சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில் இருக்கின்றன என்பதை, நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து வருகிறோம். காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள். அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் டாலிஸ்மன்எனப்படும் டாலர்வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள்.

ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக கோமதி சக்கரம்இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். பூஜை அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் இந்த கோமதி சக்கரத்தைப் பயன்படுத்தலாம். திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக இருக்கும் கோமதி சக்கரம் பற்றிய பல்வேறு தகவல்களை இங்கே காணலாம்.

ராமர் கணையாழி

ராமபிரான், ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு தன்னை அடையாளம் காட்ட கொடுத்தது ரகுவம்ச கணையாழி ஆகும். அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது லக்னோவில் உள்ள நைமிசாரண்யம். இங்கு பெருமாளின் சக்ராயுதம் உருண்டு ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது. அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம். கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும்.

கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயிலாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும். ஸ்ரீகிருஷ்ணர், கோமதி சக்கரத்தின் மீது அமைந்த தர்ம சபையில் வீற்றிருந்து ஆட்சி செய்து வந்தார் என்கிறது புராணம். சொர்க்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த கல்லை விஷ்வகர்மா மூலமாக உருவாக்கி துவாரகை மக்களின் சங்கடங்களை தீர்க்க அருளி யிருக்கிறார்.

பிள்ளையார் சுழி

கோமதி ஆறு, சரயு நதி ஆகிய இரு நதிகளும் சேரும் இடத்தை, இரு பாம்புகள் கூடும் இடம் என்று கூறுகிறார்கள். லக்னோவில் கோமதி நதியும், அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீவிநாயக பெருமானோடும், நாக தேவதையோடும் தொடர்புள்ளதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது. அதாவது எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்னர் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம். பிள்ளையார் சுழியின் இன்னொரு பெயர் கோமதி திருவலஞ்சுழிஎனப்படும். இதன் உட்பொருள், சுபம் மற்றும் லாபம் என்பதாக உள்ளது. சுதர்சன சக்கரத்திற்கும் முந்தையதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது.

நட்சத்திர பாகங்கள்

அவரவருக்கு உரிய நட்சத்திரத்திற்குரிய பாகத்தை அறிந்து அந்தப் பகுதியை தொட்டோ அல்லது மனதில் நினைத்தோ தெய்வத்தை வழிபடுவதன் மூலமாக, பூரண அருளை பெற இயலும் என்பது ரகசிய பூஜை வழிமுறையாக இருந்து வருகிறது. மேலும் அவ்வாறு வழிபடும் போது, கோமதி சக்கரமானது நம்முடன் இருக்கும் பட்சத்தில் லட்சுமி கடாட்சம் நன்றாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. நட்சத்திரங்களுக்குரிய பாகங்களை கீழே காணலாம்.
அசுவினி, பரணி, கிருத்திகை – நெற்றி.

ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை – முகப்பகுதி.

புனர்பூசம், பூசம் – இரு தோள்கள்.

ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம் – மார்பு பகுதி.

சித்திரை – வயிற்று பகுதி.

சுவாதி, விசாகம் – புஜங்கள்.

அனுசம் – உடலின் மைய பகுதி.

கேட்டை, மூலம் – இரண்டு கைகள்.

பூராடம், உத்திராடம் – இரண்டு தொடைகள்.

திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி – கால் பாதங்கள்.
நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், நமது நட்சத்திரத்திற்குரிய பாகத்தை மனதில் கொண்டு, அந்த பாகம் எதுவோ அப்பகுதியை மனதால் நினைத்தோ அல்லது தொட்டோ வணங்க வேண்டும். அதன் வாயிலாக நமது வேண்டுதல்கள் அதிசயிக்க தக்க விதத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

கோமதி சக்கரத்தின் சிறப்பு

வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம்.

கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும். அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.
வில்வ இலையானது காய்ந்து விட்டாலும், ஆறு மாதங்கள் வரையில் பலன் தரும். ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவு நாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடியது. இன்றைக்கும் வடமாநிலங்களில் உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம்.

கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும்.
மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் தொடர்புகள் மூலம், அவரவருக்கு தக்கவாறு உயர்வையோ அல்லது தாழ்வையோ அடைகிறார்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள், யாரை யாரோடு சந்திக்க வைக்கிறது என்பதை மனிதர்களால் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. விதியின் தொடர்பு இல்லாமல் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. ஒருவரோடு கொள்ளும் தொடர்பின் வாயிலாக வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள வலஞ்சுழி அமைப்பு கொண்ட கோமதி சக்கரம் உதவுகிறது.
ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும். அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது. மனித உடலில் அவை, கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகியவற்றில் அமைந்திருக்கும். நம்முடைய காதுகளின் அமைப்பும் வலஞ்சுழியாக அமைந்திருப்பதை காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது கோமதி சுற்றுஎனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து செயல்படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய்கின்றன.
கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம் பெற்றவையாக இருக்கின்றன.
கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.

SKU: S316567 Category:

Ready to ship in 3-5 business days


Vendor Information